கல்வி குரு        

News

நீட் தேர்வு பதிவுக்கு மார்ச் 12 வரை அவகாசம்

MAR 09, 2018 No Comments

img

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும், 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும், இந்திய மருத்துவம் படிக்க, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, பிப்., 9ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், நேற்று நள்ளிரவு, 11:30 மணியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள், 'ஆதார்' எண் இல்லாதவர்கள், அறிவிக்கப்பட்ட வயது வரம்பை விட, அதிக வயதுள்ளோர் விண்ணப்பிக்க, புதிதாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மார்ச், 12 வரையிலும், தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி, மார்ச், 13 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: