கல்வி குரு        

News

மரம் வளர்த்தால் போனஸ் மார்க்

JUN 27, 2018 No Comments

img

 சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மரக்கன்று நட்டு, நான்கு ஆண்டுகள் வரை வளர்க்கும் மாணவர்களுக்கு, போனசாக, 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது.சத்தீஸ்கரில்,  ராஜ்நந்த்காம் மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், 200 மாணவர்கள் படிக்கின்றனர். 2014ல், அப்போதைய தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில், மாணவர்களிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை, ஆசிரியர்கள் ஏற்படுத்தினர்.ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும், பள்ளி வளாகம் அல்லது கிராமப் பகுதியில் மரம் வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான, மா, வேம்பு, நாவல், ஆல மரம், அரச மரம் உள்ளிட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.அவற்றை கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள், மரம் வளர்த்த, மாணவ - மாணவியருக்கு, பிளஸ் 2 செய்முறை தேர்வில், போனசாக, 10 மதிப்பெண் வழங்கப்பட்டது.சமீபத்தில், பிளஸ் 2 முடித்து வெளியேறிய மாணவர்கள் நட்ட மரக்கன்றுகள் வளர்ந்து, சிறிய மரங்களாக வளர்ந்து, பசுமையாக காணப்படுகிறது

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: